மம்தா பானர்ஜி இன்று டெல்லி வருகை - பிரதமர் மோடியை சந்திக்கத் திட்டம்!

0 1854

மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

கடந்த மாதம் பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், மேற்குவங்கம், பஞ்சாப், அசாம் ஆகிய மாநிலங்களில், சர்வதேச எல்லையிலிருந்து 50 கி.மீ தூரத்துக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை மத்திய அரசு உயர்த்தியிருப்பது, மாநில உரிமையை பாதிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமருடனான சந்திப்பில் இதுகுறித்தும் மம்தா பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களைத் தனித்தனியே சந்தித்து மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க பேச்சு நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments