கர்நாடகாவில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் - வானிலை மையம்

0 3157

கர்நாடக மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பிக் காணப்படுகின்றன.

மழை சற்றே குறைந்த நிலையில், அடுத்து வரும் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. அமைச்சர்கள் பலரும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு உதவும்படி முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments