தாஜ்மகாலைப் போன்றே வீடு கட்டி மனைவிக்கு பரிசளித்த பாசமிகு கணவர்!

0 3350

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்காக தாஜ்மகாலைப் போன்றே வீடு கட்டி பரிசாக அளித்துள்ளார்.

புர்கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் சோக்சி. இவர் தாஜ்மகால் போன்று வீடு கட்டி தனது மனைவிக்கு பரிசளிக்க விரும்பினார். இதற்காக உண்மையான தாஜ்மகாலை நுணுக்கமாக ஆய்வு செய்த அவர், மேற்கு வங்கம் மற்றும் இந்தூர் பகுதிகளைச் சேர்ந்த கட்டுமான பொறியாளர்களை வரவழைத்து தாஜ்மகாலைப் போன்றே வீட்டைக் கட்டியுள்ளார்.

4 படுக்கை அறைகள் கொண்ட இந்த வீட்டைக் கட்டுவதற்கு 3 ஆண்டுகள் ஆனதாக ஆனந்த் சோக்சி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments