பீகாரில் செல்போன் திருடர்களால் இளம் மாணவி ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டு மருத்துவமனையில் அனுமதி!

0 1712

பீகார் மாநிலம் ஹாஜிபுரில் செல்போன் திருடர்களால் இளம் மாணவி ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டார்.

படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முசாபர்புரில் இருந்து இன்டர்சிட்டி ரயில் மூலம் பாட்னாவுக்குத் தேர்வு எழுதச் சென்ற மாணவியிடம் தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை பறிக்க இரண்டு பேர் முயற்சித்தனர்.அவர் தர மறுத்து போராடவே அவரை அந்த இருவரும் ஓடும் ரயிலில் இருந்து ஜன்னல் வழியாகத் தண்டவாளத்தில் தள்ளிவிட்டனர்.

குற்றவாளிகள் இரண்டு பேரும் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments