ஜெய்பீம் காலண்டர் கவனத்தில் பதியவில்லை புண்பட்டோருக்கு வருந்துகிறேன்..! மெளனம் கலைத்த இயக்குநர்..!

0 13111
ஜெய்பீம் காலண்டர் கவனத்தில் பதியவில்லை புண்பட்டோருக்கு வருந்துகிறேன்..! மெளனம் கலைத்த இயக்குனர்..!

நடிகர் சூர்யாவுக்கு எதிரான டுவிட்  இந்திய அளவில் டிரெண்டிங் ஆன நிலையில், மனம் புண்பட்டவர்களிடம் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக ஜெய்பீம் இயக்குனர் த.செ. ஞானவேல் தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தியதோடு, தவறை சுட்டிக்காட்டிய பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதத்துக்கு உங்கள் வேலையை பாருங்கள் என்று நடிகர் சூர்யா பதில் கடிதம் எழுதிய நிலையில், சூர்யா ஹேட்ஸ் வன்னியர்ஸ் என்ற ஹேஷ்டாக், 2 லட்சத்துக்கும் அதிகமோனோரால் பகிரப்பட்ட நிலையில் இந்திய அளவில் 4 வது இடத்தை பிடித்து டிரெண்டானது. இதையடுயடுத்து 3 வாரங்களாக மவுனம் காத்து வந்த ஜெய்பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் , வருத்தம் தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார்.

அதில், பலரது பாராட்டுக்கள் பெற்ற ஜெய்பீம் சிலரது எதிர்கருத்துக்களையும் பெற்றது. தாங்கள் திட்டமிட்டு குறிப்பிட்ட காலண்டர் காட்சியை வைக்கவில்லை என்றும் போஸ்ட் புரொடக்சன் பணியின் போதும், பெரியதிரையில் பலமுறை படத்தை பார்த்த போதும் குறிப்பிட்ட காலண்டர் தனது கவனத்தில் பதியவில்லை என்றும் அந்த காட்சியால் இப்படி ஒரு சர்ச்சை வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் இந்தக் காட்சி எந்த ஒரு உள் நோக்கத்துடன் இடம்பெற வில்லை என்று த.செ.ஞானவேல் கூறியுள்ளார்.

மேலும் இந்த் காட்சி குறித்து யாரும் சொல்வதற்கு முன்பாக சமூக வலைதளம் வாயிலாக அறிந்தவுடன் அந்த காலண்டர் காட்சியை மாற்றியதாகவும், இந்த திரைப்படம் எந்த சமூகத்துக்கும் எதிரானது அல்ல என்றும் இதனால் மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், மனம் புண்பட்டவர்களிடமும் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள இயக்குனர் த.செ.ஞானவேல் , இந்த விவகாரத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எந்த தொடர்பும் இல்லாத நடிகர் சூர்யா, எதற்காக அன்புமணி ராமதாஸ் கடிதத்தை உதாசினப்படுத்துவது போல பதில் அறிக்கை வெளியிட்டார் என்று சமூக வலைதளங்களில் பா.ம.க வினர் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments