ரூ.500 கோடி கட்டணம் செலுத்தி விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் ஜப்பான் தொழிலதிபர்.. ஆயத்த பயிற்சியில் தீவிரம்..!

0 2638
ரூ.500 கோடி கட்டணம் செலுத்தி விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் ஜப்பான் தொழிலதிபர்

500 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் ஜப்பான் தொழிலதிபர், அதற்கான ஆயத்த பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார். கசகஸ்தானில் உள்ள ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் மூலம், ஜப்பானை சேர்ந்த பிரபல தொழிலதிபர் யுசகு மேசவா, விண்வெளி சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்திருந்தார்.

அவரது உதவியாளர் யோசோ ஹிரானோவும் உடன் பயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் கசகஸ்தானில் உள்ள ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தில், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் மிசுர்கின் பயிற்சி அளித்து வருகிறார். இந்த பயிற்சி தனக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக, யுசகு மேசவா தெரிவித்துள்ளார்.

சோயஸ் விண்கலம் மூலம், இவர் தனது உதவியாளருடன், டிசம்பர் 8-ம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் சுமார் 500 கோடி ரூபாய், கட்டணமாக செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments