பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீச்சு.. திருமணத்திற்கு மறுப்பு.. பெண் வெறிச்செயல்..!

0 3027
பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீச்சு.. திருமணத்திற்கு மறுப்பு.. பெண் வெறிச்செயல்..!

கேரளாவில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த முகநூல் காதலன் மீது 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முகநூலில் பார்த்து பார்த்து காதலித்த காதலனின் கண் பார்வையை பறித்த ஆசிட் அட்டாக் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.... 

திருவனந்தபுரத்தை சேர்ந்த அருண்குமாருக்கு முகநூல் மூலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஷீபா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். ஹாய், ஹலோ என ஆரம்பித்த இவர்களது பேஸ்புக் உரையாடல் நாளடைவில் மணிக்கணக்கில் தொடர்ந்து, காதலாக மாறியுள்ளது.

ஷீபாவை திருமணம் செய்து கொள்வதாக அருண்குமாரும் வாக்குக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், பின்னாளில் ஷீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகளுக்கு அவர் தாய் என்ற உண்மை அருண்குமாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஷீபாவிடம் பேசுவதை அருண்குமார் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் விடாத ஷீபா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து அருண்குமாரை வற்புறுத்தியதோடு, 2லட்ச ரூபாய் பணம் தருமாறு கேட்டு பிளாக்மெயில் செய்யத் தொடங்கியுள்ளார்.

இது தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் இடையே செல்போனில் வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இதற்கிடையே, அருண்குமாருக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதை அறிந்து கொண்ட ஷீபா, பிரச்சனையை சுமூகமாக பேசி முடித்துக் கொள்ளலாம் எனக் கூறி சம்பவத்தன்று, அருண்கும்காரை அடிமாலிக்கு வரசொல்லியிருக்கிறார்.

இதனை நம்பி அருண்குமாரும் அடிமாலிக்கு வந்து தேவாலயத்தில் வைத்து ஷீபாவை சந்தித்திருக்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே வாக்குவாதம் ஏற்படவே, ஆவேசமாக பேசிய அருண்குமார் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, தனது ஹேண்ட் பேக்கில் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து, அருண்குமார் முகத்தில் வீசிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

ஆசிட் வீச்சால் காயமடைந்த அருண்குமார் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் அருண்குமாருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அருண்குமாரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட போலீசார், ஷீபாவை அவரது கணவர் வீட்டில் இருந்து கைது செய்தனர். ஆசிட்டை வீசும் போதும் அது அவர் மீதும் பட்டதால் ஷீபாவுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments