ஆந்திரத்தில் கனமழை ; கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

0 2562
ஆந்திரத்தில் கனமழை ; கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளதால் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள அம்மாபள்ளி அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படுவதால் திருவள்ளூர் மாவட்டம் நாராயணபுரத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆற்றின் இரு கரைகளிலும் பலநூறு ஏக்கர் நிலங்களில் நெல், கரும்பு, நிலக்கடலைப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

 கேசவரம் அணைக்கட்டிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்படும் உபரி நீர் பூண்டி ஏரியை நோக்கி ஆர்ப்பரித்துப் பாய்கிறது. இதனால் கரையோரமுள்ள விளைநிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

 பூண்டி ஏரியின் 10 மதகுகளைத் திறந்து நொடிக்கு 23 ஆயிரத்து 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்துப் பாய்கிறது. விடுமுறை நாளென்பதால் ஆர்ப்பரித்துப் பாயும் வெள்ளத்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது.

 பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்பட்டுள்ள நீர் தாமரைப்பாக்கம் தடுப்பணையில் மதகுகளைத் தாண்டி ஆர்ப்பரித்துப் பாய்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments