இந்தியாவின் போர் தந்திரங்களுக்கு ஏற்றவாறு ரபேல் போர் விமானங்களை மேம்படுத்தும் பணி புத்தாண்டில் துவங்கும் என தகவல்

0 2427
இந்தியாவின் போர் தந்திரங்களுக்கு ஏற்றவாறு ரபேல் போர் விமானங்களை மேம்படுத்தும் பணி புத்தாண்டில் துவங்கும் என தகவல்

இந்தியாவின் போர் தந்திரங்களுக்கு ஏற்றவாறு ரபேல் போர் விமானங்களை மேம்படுத்தும் பணி புத்தாண்டில் துவங்கும் என கூறப்படுகிறது. இதற்கு முன்னோடியாக இந்திய விமானப்படை அதிகாரிகள் பிரான்ஸ் சென்றுள்ளனர்.

அங்குள்ள Istres விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள சோதனை ரபேல் விமானத்தில் இந்தியாவுக்கு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சோதனை விமானத்தில் திறன்வாய்ந்த ஏவுகணைகள், லோ பாண்ட் ஜாமர்கள், சாட்டிலைட் கம்யூனிகேஷன் வசதி உள்ளிட்டவற்றை இந்தியாவின் தேவைக்கு ஏற்ப ரபேல் நிறுவனம் பொருத்தி வழங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அது ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டால், வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் உள்ள 30 ரபேல் விமானங்களும் அதற்கேற்றவாறு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 3 ரபேல் விமானங்கள் வரும் 7 அல்லது 8 ஆம் தேதி இந்தியா வந்து சேரும் எனவும் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments