நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் ஆட்டம் மிகவும் சூப்பர் - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரன் அக்மல்

0 3254
நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் ஆட்டம் மிகவும் சூப்பர் - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரன் அக்மல்

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் சூப்பராக விளையாடுகிறது என பாகிஸ்தானின் புகழ்பெற்ற முன்னாள் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான கம்ரன் அக்மல் பாராட்டியுள்ளார்.

தமது யுடியூப் சேனலில் இதை தெரிவித்துள்ள அவர், சில முக்கிய மூத்த வீரர்களுக்கு ஒய்வு அளித்து புதியவர்களுக்கு வாய்ப்பளித்தாலும், நியூசிலாந்திற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் அணி வெளிப்படுத்தியதாக புகழாரம் சூட்டி இருக்கிறார்.

இது போன்ற துணிச்சலான முடிவை வேறு எந்த அணியும் எடுக்காது என்று குறிப்பிட்டுள்ள அவர், வீரர்களின் சுமையை எளிதாக்குவதுடன், தென்னாப்பிரிக்க பயணத்திற்கான அணியை இந்தியா கட்டமைக்கிறது என்பதை இது காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் அவரது பேட்டிங்கைப் போல வேகமாக இருப்பதாகவும் கம்ரன் அக்மல் பாராட்டி உள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments