காற்று மாசு காரணமாக, டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளை மூட அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

0 2154

காற்று மாசு காரணமாக, டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளை மூட அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. இதன் காரணமாக, டெல்லியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் 20-ந் தேதிவரை மூடப்பட்டன.

இந்த நிலையில், காற்றின் தரம் சீரடையாததால், தலைநகரிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக, வகுப்புகளை நடத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி டெல்லியில் காற்று தரக்குறியீடு 382ஆக உள்ளது. காற்றின் தரக்குறியீடு 200ஐ தாண்டினாலே மோசமான நிலையை எட்டியது என்பது பொருளாகும். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments