கோவையில் 5வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்!

0 3921

கோவையில் 5வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அத்துமீறியதாக கூறப்படும் முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சரவணம்பட்டியைச் சேர்ந்த ஜாகீர் உசைன் என்ற அந்த முதியவர், தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்ததோடு, சிறுமியை கொஞ்சுவது போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

முதியவரின் அருவறுக்கத்தக்க செயலை பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் மாடியில் இருந்து வீடியோ எடுத்து, சிறுமியின் பெற்றோரிடம் காண்பித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசாரின் விசாரணையில், ஜாகீர் உசேன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ், முதியவர் கைது செய்யப்பட்டார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments