ராமநாதபுரம் மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகையான தோணி ஆமையை கடலிலேயே மீண்டும் விட்ட மீனவர்கள்!

0 2484

ராமநாதபுரம் மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை ஆமையான தோணி ஆமையை மீனவர்கள் மீண்டும் கடலிலேயே விட்டனர்.

அழகுச் சாதனப் பொருட்களுக்காகவும், மாமிசத்துக்காகவும் அதிகளவில் வேட்டையாடப்படும் இவ்வகை ஆமை, மிக வேகமாக அழிந்துவரும் கடல்வாழ் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிகநாள் உயிர்வாழக்கூடிய இனமாக அறியப்படும் தோணிஆமை மன்னார் வளைகுடாவில்  மீன்பிடித்திருந்த  மூக்கையூர் மீனவர்களின் வலையில் சிக்கியது.

சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு காணக்கிடைத்த அரியவகை தோணி ஆமை மீண்டும் கடலிலேயே விடப்பட்டது. இதேப்போன்று மற்றொரு வலையில் சிக்கிய 800 கிலோ எடைகொண்ட மூன்று சித்தாமைகளும்  கடலிலேயே மீண்டும் விடப்பட்டன.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments