வானிலை முன்னறிவிப்பை வைத்து ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த போதைப்பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள்! 

0 5567

வானிலை முன்னறிவிப்பை வைத்து ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்த கும்பலை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தென்மாநில பகுதிகளில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று வேலூர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே நடத்தப்பட்ட சோதனையில் 212 புள்ளி 5 கிலோ கஞ்சா, தேங்காய் நாரில் வைத்து கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி ஈரோட்டில் விற்பனை செய்ய கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

சென்னை - ஆந்திரா பகுதிகளில் கனமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டல எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்திருந்தது. இத்தருணத்தில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தினால் சோதனையில் சிக்க மாட்டோம் என அவர்கள் திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments