சென்னையில் மழைநீர் வடிகால்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வடிகால்களின் வரைபடங்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம்!

0 5515

சென்னை பெருநகரில் உள்ள மழைநீர் வடிகால்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக வடிகால்களின் வரைபடங்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில்  2071 கிலோமீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த மழையின்  போதே வடிகால் வரைபடங்களை பதிவேற்ற பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து முதற்கட்டமாக 11 மண்டலங்களுக்கான மழைநீர் வடிகால்களின் வரைபடங்கள் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள திருவொற்றியூர், மணலி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களின் வரைபடமும் விரைவில் பதிவேற்றப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments