புதுச்சேரியில் விலையுயர்ந்த சைக்கிள்களை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த தம்பதியினரை கைது செய்த காவல்துறையினர்

0 4239

புதுச்சேரி நகர்ப்பகுதிகளில் விலையுயர்ந்த சைக்கிள்களை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த தம்பதியினரை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

சந்தா சாஹிப் வீதியை சேர்ந்த முகமது சல்மான், வீட்டு வாசலில் நிறுத்திவைத்திருந்த சைக்கிள் மாயமானதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் சைக்கிளை திருடிச்செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து சல்மான் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சியில் தெரிந்த வாகனத்தின் எண்ணைக் கொண்டு விசாரணையை துவக்கிய ஒதியஞ்சாலை காவல்துறையினர், சைக்கிளை திருடியது  திப்புராயப்பேட்டையைச் சேர்ந்த ஜாகிர் பாட்ஷா மற்றும் அவரது மனைவி நிஷா என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, ஜாகிர் பாட்ஷாவை கைது செய்து வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிலான ஆறு  சைக்கிள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள அவரது மனைவி நிஷாவை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments