திருவாரூரில் கட்டட வேலை செய்வதாக வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரங்களில் வாகனங்களை திருடி வந்த திருடனை கைது செய்த போலீசார்!

0 1704

திருவாரூரில் பகல் நேரங்களில் கட்டட வேலை செய்வதாக வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரங்களில் வாகனங்களை திருடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மடப்புரம் சித்திவிநாயகர் கோயில் தெருவில், கடந்த 18 ஆம் தேதி இரவு தெட்சணாமூர்த்தி என்பவர் வீட்டில் உள்ள இருசக்கர வாகனத்தை, மர்ம நபர் வீட்டின் கேட்டை திறந்து, திருடிசென்றார்.

தெட்சணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், மடப்புரம் வாகன திருட்டில் ஈடுபட்ட அதே மூன்று பேர் கொண்ட கும்பல், மாவட்ட எல்லையில் உள்ள நீலபாடி எனும் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட போது, அக்கும்பலை சேர்ந்த விக்னேஷ் என்ற திருடனை வீட்டின் உரிமையாளர் பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

இதில் தப்பி சென்ற மேலும் இருவரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments