சொர்ணமுகி ஆற்றின் பாலம் உடைந்ததால் சுமார் 5 கி.மீ தூரம் வரை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்...

0 2441

மழை வெள்ளம் காரணமாக ஆந்திர மாநிலம் சொர்ணமுகி ஆற்றின் பாலம் உடைந்த காரணத்தால் தமிழக ஆந்திர எல்லையில் பல மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது.

கும்மிடிப்பூண்டி முதல் எளாவூர் சுங்கச் சாவடி வரை சுமார் 10 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் அனைத்தையும் போலீசார் கவரப்பேட்டை வழியாக ஆந்திராவுக்கு திருப்பிவிட்டுள்ளனர்.

சொர்ணமுகி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் முழுவதும் உடைந்த காரணத்தால் இந்த வழியில் சீராக   போக்குவரத்து நடைபெறுவது கடினம் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments