வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் தம்பதியர் இருவர் பலி

0 2361

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் வயதான தம்பதியர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஜமீன் எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்த வேதாசலம், அவரது மனைவி செந்தாமரை இருவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, மண்சுவர் இடிந்து விழுந்துள்ளது. உறங்கிக்கொண்டிருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்மழையின் காரணமாக மண்சுவர் வலுவிழந்ததால் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

முதிய தம்பதியின் பேத்தி வழக்கம்போல் காலையில் காபி கொண்டுவந்தபோது இருவரும் பலியாகியிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த சித்தாமூர் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் வட்டாட்சியர் நடராஜனும் ஆய்வு மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments