சைபர் கிரைம் வழக்குகளில் தொடர்புடைய , நைஜீரிய குடியுரிமை பெற்ற முக்கிய நபரை கைது செய்த டெல்லி போலீசார்...

0 1980

சைபர் கிரைம் வழக்குகளில் தொடர்புடைய , நைஜீரிய குடியுரிமை பெற்ற முக்கிய நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். 

வாட்ஸ் ஆப் நம்பரை ஹேக் செய்து, அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் பணம் தேவை என்று கூறி, வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு, வாட்சப் தொடர்பில் இருப்பவர்களுக்கு மெசேஜ் அனுப்புவான்.

இது தொடர்பான புகார்களையடுத்து விசாரணையில் இறங்கிய டெல்லி சைபர் கிரைம் போலீசார், மோசடியில் ஈடுபட்டு வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர். 

மோசடி மூலம் சேர்த்த பணத்தை பெங்களூரில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றில் அவன் போட்டு வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.  அவனிடமிருந்து 4 செல்போன்கள் 8 ஏடிஎம் அட்டைகள், பல்வேறு சிம்கார்டுகள், போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments