காதலிக்க மறுத்த இளைஞர் மீது ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் தாய்

0 10481

கேரள மாநிலம் இடுக்கி அடுத்த அடிமாலியில் காதலிக்க மறுத்த இளைஞரின் முகத்தில் ஆசிட் வீசிய  2 குழந்தைகளுக்கு தாயான பெண் கைது செய்யப்பட்டார்.

ஷீபா என்பவருக்கும், அருண்குமாருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. ஷீபாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை தெரிந்த அருண்குமார், அவருடனான பழக்கத்தை முறித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இரும்புபாலம் அந்தோனியார் தேவாலயம் அருகில் அருண்குமாரை வரவழைத்து, அவர் மீது ஷீபா ஆசிட் வீசியுள்ளார். இந்த திடீர் தாக்குதலில் அருண்குமாருக்கு ஒருகண் பார்வை பறிபோனது. ஆசிட் வீசும் போது அருண்குமார் தடுத்த போது ஷீபாவின் மீதும் ஆசிட் பட்டதாக கூறப்படும் நிலையில் அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments