நடிகை ஹேமா மாலினிக்கு திரைப்பட ஆளுமைக்கான விருது

0 2132

52 வது இந்திய சர்வேதச திரைப்பட விழா கோவா தலைநகரான பனாஜியில் தொடங்கியது.

நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமா மாலினிக்கு, திரைப்பட ஆளுமைக்கான விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கி கௌரவித்தார்.

இந்த விருது பல ஆண்டுக்கால தமது உழைப்புக்கு கிடைத்த கௌரவம் என்று ஹேமா மாலினி மகிழ்ச்சி தெரிவித்தார். இதே போன்று சத்யஜித் ரே விருது அமெரிக்கத் திரைப்பட இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்ஸஸிக்கு வழங்கப்பட்டது.

இம்மாதம் 28 ஆம் தேதி வரை நடைபெறும் இத்திரைப்பட விழாவில் தமிழ்படமான கூழாங்கல் உள்ளிட்ட பல்வேறு மொழி மற்றும் வெளிநாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. முதன் முறையாக ஓடிடியில் வெளியான திரைப்படங்களுக்கும் திரையிட அனுமதி கிடைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments