காஷ்மீர் என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீனின் முக்கிய தீவிரவாதி முடாசிர் வாகே கொல்லப்பட்டதாக தெரிவித்த காவல்துறையினர்... 

0 1989

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்  ஹிஸ்புல் முஜாஹிதீனின் முக்கிய தீவிரவாதி முடாசிர் வாகே கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குல்காம் மாவட்டம் மால்வான் என்ற கிராமத்தை சேர்ந்த இந்த தீவிரவாதி 2018 முதல் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவன் என்று காஷ்மீர் போலீஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸ், ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் குழுக்கள் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments