கரூர் மாணவி தற்கொலை விவகாரம் ; நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

0 3495
நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கரூரைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாணவியின் தற்கொலை தொடர்பாக வெங்கமேடு காவல்நிலையத்தில் உரிய நேரத்தில் புகாரளித்தும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மாணவியின் உறவினர்கள் உயர் அதிகாரிகளிடம் புகாரளித்தனர்.

இதையடுத்து, வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசனை, திருச்சி மண்டல காவல் சரக துணை தலைவர் சரவண சுந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

மேலும்,பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பெண், தானாக இருக்க வேண்டும் என மாணவி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments