அக்கா மகளிடம் தகராறு செய்த நபரை அடித்து கொன்ற தாய்மாமன்

0 6805
அக்கா மகளிடம் தகராறு செய்த நபரை அடித்து கொன்ற தாய்மாமன்

தென்காசி மாவட்டத்தில், அக்கா மகளிடம் தகராறு செய்ததாகக் கூறி, ஒருவரை அடித்து கொலை செய்த தாய்மாமன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

மேலகடையநல்லூரில் பெயிண்டராக வேலை செய்து வந்த கோபால், அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிடம் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண் அவரது பெற்றோர்களிடம் கூறவே, அந்தப் பெண்ணின் தாய்மாமன் மாரிப்பாண்டி கோபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியதில் மாரிப்பாண்டியும் அவரது அண்ணி வேல்தாய்யும் கோபாலை கடுமையாக தாக்கியும், அவர் மீது கல்லை போட்டும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் கோபாலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments