இந்திய-பாகிஸ்தான் எல்லைகளை திறக்க வேண்டும் ; பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்து பேச்சால் சர்ச்சை

0 2134
பஞ்சாப் காங்.தலைவர் சித்துவின் பேச்சால் சர்ச்சை

பஞ்சாப் மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டுமானால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைகளை வர்த்தகத்திற்காக திறக்க வேண்டும் என கூறி பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் சாகிப் குருத்வாராவுக்கு செல்லும் வழியில் குர்தாஸ்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். பஞ்சாபில் இருந்து 21 கிலோ மீட்டர் அருகில் பாகிஸ்தான் இருக்கும் போது 2 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் தூரம் சுற்றி முண்ட்ரா துறைமுகம் வழியாக பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்வது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதன் பின்னர் கர்த்தார்பூர் குருத்வாராவுக்கு சென்ற அவர், அங்கு வைத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது மூத்த சகோதரரை போன்றவர் என கூறி அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments