ராணுவப் பணிக்கு செல்லும் 2 குழந்தைகளுக்கு தாயான பெண் ; வழியனுப்பும் விழாவில் குழந்தைகளுடன் பங்கேற்பு

0 2015
ராணுவ அதிகாரிப் பயிற்சியை முடித்துள்ளார் 2 குழந்தைகளின் தாய் ஜோதி

சென்னை பரங்கி மலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் இரண்டு குழந்தைகளின் தாயான ஜோதி நைன்வால் என்கிற பெண் பயிற்சி முடித்து ராணுவப் பணிக்குச் செல்கிறார்.

124 ஆண்கள், 29 பெண்கள், வெளிநாட்டவர் 25 பேர் என மொத்தம் 178 பேர் பயிற்சி முடித்துள்ளனர். இவர்களில் ஒருவரான ஜோதி நைன்வால் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஆவார்.

இவரின் கணவர் தீபக் நைன்வால் இந்திய ராணுவத்தில் பணியாற்றி 2018ஆம் ஆண்டு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையின்போது வீரமரணமடைந்தவர்.

வழியனுப்பு விழாவில் தனது குழந்தைகளுடன் கலந்துகொண்ட ஜோதி, ராணுவ அதிகாரியாகப் பயிற்சி பெறுவதற்குத் தன் கணவர் பணியாற்றிய படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஊக்கமளித்ததாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments