கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் மீது உருண்டு விழுந்த பாறை

0 2088

கனமழையால் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாறை உருண்டு விழுந்ததில் ஒரு வீடும் அலுமினிய பாத்திரம் தயாரிக்கும் தொழிற்சாலையும் சேதமடைந்துள்ளது.

அங்கிருந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், செதுக்கரை மலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாறை ஒன்று உருண்டு விழுந்ததில், ஒரு குடிசை வீடும் அலுமினியப் பாத்திரம் தயாரிக்கும் தொழிற்சாலையும் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

குடிசை வீட்டில் இருந்த கோவிந்தனும் அவரது மகள் கலையரசியும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments