இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி

0 2117

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

இந்தோனேசியா நாட்டின் பாலியில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுஷியை எதிர்கொண்ட பி.வி.சிந்து 13க்கு 21, 9க்கு 21 என்ற கணக்கில் தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் அண்டன்சனுடன் மோத உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments