செல்போன் கடையின் மேற்கூரையை பிரித்து ஒரு லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை ; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனுக்கு வலைவீச்சு

0 1790
செல்போன் கடையின் மேற்கூரையை பிரித்து ஒரு லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செல்போன் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய கொள்ளையன், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சோமனாஅள்ளி பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன் பாலக்கோடு கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். அவர் நேற்றிரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையன், கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி கடைக்குள் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள், மெமரி கார்டு உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments