ஆந்திராவில் பக்கத்து வீட்டின் மீது சரிந்து விழுந்த பழமையான கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

0 1997

கனமழையால் ஆந்திராவில் பழமையான கட்டிடம் ஒன்று பக்கத்தில் இருந்த குடியிருப்பின் மீது சரிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனந்தபூர் மாவட்டம் கதிரி பஜார் பகுதியில் இருந்த பழமையான மூன்றடுக்கு கட்டிடம் மழையால் சேதமடைந்திருந்த நிலையில், இன்று அதிகாலை பக்கத்தில் இருந்த இரண்டடுக்கு மாடி கட்டிடத்தின் மேல் சரிந்து விழுந்துள்ளது. இதில் அந்த குடியிருப்பில் இருந்த 16 பேரில், இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கதிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜேசிபி இயந்திரங்களின் மூலம் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments