துப்பாக்கியை காட்டி மிரட்டி தொடர் வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது..!

0 1621

சென்னை வியாசர்பாடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

மல்லிகைப்பூ காலனி தெருவை சேர்ந்தவர் வடமலை. வேலை முடிந்து வீடு திரும்பிய அவரை சத்தியமூர்த்தி நகர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் பின் தொடர்ந்தனர். அவரிடம் ஏர்கன் துப்பாக்கியை காட்டி, மிரட்டி ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகார் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் சந்தோஷ் குமார், நிர்மல் குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்த போது வழிபறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து, ஏர்கன் துப்பாக்கி மற்றும் ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments