தடுப்பூசி செலுத்தியது குறித்து ரகசியம் காக்கும் "நோவக் ஜோகோவிச்"..

0 3001

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கும், போட்டியை காண வரும் ரசிகர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலகளவில் மிக நீண்ட கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மெல்போர்னில் ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடங்க உள்ளது. கடந்தாண்டை போல் அல்லாமல் இந்தாண்டு 100 சதவீத இருக்கைகளிலும் ரசிகர்கள் அமர அனுமதிக்கப்பட்டுள்ளதால் மைதானத்தில் இருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டது குறித்து தொடர்ந்து ரகசியம் காத்து வரும் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய டென்னிஸ் வாரியத்தின் இந்த முடிவால், தடுப்பூசி செலுத்தினாரா, இல்லையா என்பதை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments