தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

0 4262

திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவித்த வானிலை மையம், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் என அறிவித்துள்ளது.

உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மேலும், நாளை சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், வட கடலோர தமிழகம் மற்றும் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வரும் 22ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments