'பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும்’... கடிதம் எழுதி வைத்து விட்டு 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

0 11668

பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பெண், தானாக தான் இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு, கரூரில், 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டில் தனியாக இருந்து வந்த நிலையில், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பாட்டி உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது மாணவி தூக்கில் தொங்கியபடி இருந்ததாக கூறப்படும் நிலையில் அவரது தாய்க்கும், போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி, தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து அவர் கைப்பட எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பிரேத பரிசோதனைக்கு பின் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பாலம்மாள்புரம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments