மூதாட்டியின் கழுத்தில் கிடந்த இரண்டரை சவரன் நகையை பறித்த இளைஞர் கைது

0 2113

மதுரை மாவட்டம் சொக்கலிங்கபுரத்தில் உணவு வழங்குவதாக கூறி மூதாட்டியின் கழுத்தில் கிடந்த இரண்டரை சவரன் நகையை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வசந்திக்கு, உணவு வாங்கி வந்துள்ளதாகவும், கதவை திறந்தால் வழங்குவதாகவும் கூறிய நபர், கதவை திறந்தவுடன் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த இரண்டரை சவரன் தங்க நகையை பறித்து விட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

அலறல் சத்தம் கேட்டு வந்த மக்கள் களவில் ஈடுபட்டது அதே ஊரை சேர்ந்த அஜித் என்ற இளைஞர் என அடையாளம் கண்டதாக கூறப்படுகிறது. ஊர் மக்கள் கொடுத்த தகவலை அடுத்து போலீசார் அஜித்தை கைது செய்து நகையை மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments