வேட்டைக்காரர்களின் கண்ணியில் சிக்கி துதிக்கையை இழந்த குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு

0 2979

இந்தோனேஷியாவில் துதிக்கை துண்டிக்கப்பட்ட குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

அச்சே ஜெயா என்ற இடத்தில் வேட்டைக்காரர்கள் வைத்திருந்த கண்ணியில் சிக்கிய ஒரு வயது மதிக்கத்தக்க குட்டி யானையின் துதிக்கை பாதியளவிற்கு துண்டிக்கப்பட்டது.

இதனால் யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் காயம் கடுமையாக இருந்ததாலும், தீவிர சிகிச்சை அளித்தும் அந்தக் குட்டி யானை உயிரிழந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments