விளை நிலத்தில் புகுந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தம்பதி

0 2381

திருவள்ளூர் மாவட்டம் குப்பத்துப்பாளையத்தில் விளை நிலத்தில் புகுந்த வெள்ள நீரில் சிக்கிக் கொண்ட தம்பதியை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

விவசாய பணிக்காக விளை நிலத்திற்குள் சென்ற மணி, அமுலு தம்பதி தொடர் மழையால் இரவு வயலில் இருந்த வீட்டில் தங்கியுள்ளனர். மறுநாள் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், வயல்வெளியில் புகுந்து இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வெளியேற முடியாமல் வீட்டின் கூரை மீது ஏறி நில உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதுகுறித்து நில உரிமையாளர் அளித்த தகவலில் வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர்  வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தம்பதியை பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments