சமைக்கப்பட்ட உணவை பயணிகளுக்கு மீண்டும் பரிமாற ரயில்வே நிர்வாகம் முடிவு

0 6904

சமைக்கப்பட்ட உணவை பயணிகளுக்கு மீண்டும் பரிமாற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தொலைதூர ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரயில்களில் தினசரி 11 லட்சம் பேர் உணவை ஏற்று வந்தனர். கொரோனா பாதிப்பையொட்டி ரயில்களில் உணவு சமைப்பது நிறுத்தப்பட்டது.

ரயில் நிலையங்களில் கிடைக்கும் தரமில்லாத உணவுப் பொட்டலங்களையும் வீட்டில் சமைத்து எடுத்து வந்த உணவையும் உண்ண பயணிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்நிலையில்  மீண்டும் ரயில்வே இயல்புக்கு திரும்புவதால் ரயில்களில் கேட்டரிங் மூலம் உணவு சமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments