திம்பம் மலைப்பாதையில் கர்நாடக அரசுப் பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதல்... 50 அடி ஆழ மலைச்சரிவில் பாய்ந்த லாரி!

0 2492

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் கர்நாடக பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி அரிசி பாரம் ஏற்றிய லாரி ஒன்று திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. 5வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற போது கும்பகோணத்தில் இருந்து மைசூர் நோக்கி சென்ற கர்நாடக அரசு பேருந்து மீது எதிர்பாராதவிதமாக அந்த லாரி நேருக்கு நேர் மோதியது. தொடர்ந்து மோதிய வேகத்தில் அந்த லாரி சாலையோர தடுப்பு சுவரை உடைத்து கொண்டு 50அடி ஆழ மலைச்சரிவில் பாய்ந்து மண்ணில் புதைந்து நின்றது.

இந்த விபத்தில் பேருந்தில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் இயந்திரங்கள் மூலம் லாரியை மீட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments