சீனா தொடர்ந்து ஒப்பந்தங்களை மீறி வருவதால், அந்நாட்டுடனான உறவு பாதிப்பு - அமைச்சர் ஜெய்சங்கர்

0 1930

சீனா தொடர்ந்து ஒப்பந்தங்களை மீறி வருவதால், அந்நாட்டுடனான உறவு பாதிப்பு அடைந்து இருக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த புளூம்பர்க் புதிய பொருளாதார மண்டலம் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற ஜெய்சங்கர்,சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை அண்மையில் சந்திக்கும்போது இருநாட்டு உறவில் ஏற்பட்ட பாதிப்பை எடுத்துரைத்ததாகக் கூறினார்.

சீனா தான் இனி முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர், சீனாவிடம் அதன் செயல்களுக்கான விளக்கம் ஏதும் இல்லை என்று சுட்டிக் காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments