நட்சத்திர விடுதி... குவாரன்டைன்.. பெண் மருத்துவர்களிடம் அத்துமீறல்.. மருத்துவர்கள் இருவர் கைது..!

0 4632
நட்சத்திர விடுதி... குவாரன்டைன்.. பெண் மருத்துவர்களிடம் அத்துமீறல்.. மருத்துவர்கள் இருவர் கைது..!

சென்னையில் கொரோனா காலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பயிற்சி பெண் மருத்துவர்ளிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சக மருத்துவர்கள் இருவரையும் பணிநீக்கம் செய்து மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையில் கொரோனா அதிகமாக இருந்த காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் வீட்டுக்கே போகாமல் ஷிப்ட் அடிப்படையில் தனிமைப்படுத்துதலில் இருந்து பணியாற்றி வந்தனர். இதற்காக, மருத்துவ பணியாளர்களுக்கு நட்சத்திர விடுதிகளில் அறை எடுத்து அரசே தங்க வைத்திருந்தது. ஒரு வாரம் பணியிலும், ஒரு வாரம் தனிமைப்படுத்துதலிலும் இருந்து அவர்கள் பணிபுரிந்து வந்தனர்.

அவ்வாறு, கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தேனாம்பேட்டையிலுள்ள தனியார் விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்த இரண்டு பயிற்சி பெண் மருத்துவர்களிடம் உடன் பணிபுரிந்த வெற்றிச் செல்வன் என்ற மருத்துவரும், மோகன்ராஜ் என்ற மருத்துவரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, விசாகா கமிட்டி தீவிர விசாரணை நடத்தி, புகார் கொடுத்த 2 பெண் மருத்துவர்களிடமும், குற்றச்சாட்டுக்குள்ளான அரசு மருத்துவர்களான வெற்றிச் செல்வன், மோகன் ராஜிடம் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கையில் பாலியல் குற்றச்சாட்டு உறுதியானதால், இருவரையும் போலீசார் கைது செய்தனர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்து மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எலும்பு நோய் சிகிச்சை பிரிவு மருத்துவரான வெற்றிச் செல்வன், தேனாம்பேட்டையிலுள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த போது, தன்னுடன் பணியாற்றி அதே ஹோட்டலில் தனிப்படுத்துதலில் இருந்த பெண் மருத்துவரை மிரட்டி பாலியல் ரீதியாக அத்து மீறியதை ஒப்புக் கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பயிற்சி மருத்துவருக்கு பணி தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்குவதாக கூறி, அவர் அத்துமீறியது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு மருத்துவர் மோகன்ராஜ் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மயக்கவியல் மருத்துவர் ஆவான். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய மோகன்ராஜ், மற்ற மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஷிப்டு போடும் பணியையும் செய்து வந்துள்ளான். இதனை வைத்து, உடன் பணிபுரிந்த பயிற்சி மருத்துவரை மிரட்டி அடிக்கடி அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ள மோகன்ராஜ், ஹோட்டலில் தனிமைபடுத்தலில் இருந்த போது அந்த பெண்ணிடம் அத்துமீறியதாக ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தற்போதும் மருத்துவப் பணியாளர்கள் சிலர் நட்சத்திர விடுதியில் தங்கி பணிக்கு சென்று வரும் நிலையில், வரம்பு மீறல் குறித்த புகார் எழுந்தால் அவர்களை உடனடியாக ஹோட்டல் அறையை விட்டு வெளியேற்ற வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குநரம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஹோட்டல் அறைக்கு சென்று ஆய்வு நடத்தி, வரம்பு மீறல் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிக்கை அளிக்க மருத்துவகல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments