போக்குவரத்தை சீர்படுத்த சிறப்பு படை அமைக்குமாறு, மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 3024

சென்னையில் போக்குவரத்தை சீர்படுத்த, சிறப்பு படை அமைக்குமாறு, மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜி.எஸ்.டி சாலையில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, குரோம்பேட்டை புதுவை நகர் சிறுதொழில் வியாபாரிகள் சங்கம், வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், வணிக நிறுவனங்களிடம் மாமூல் பெற்றுக் கொண்டு, சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்த போலீசார் சிலர் அனுமதிப்பதாகவும், இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

விதிகளை மீறும் நிறுவனங்களின் உரிமத்தை, உள்ளாட்சி அமைப்புகள் ரத்து செய்ய வேண்டும், எனவும் உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments