தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ; கல்லூரியின் தாளாளரை கைது செய்யக்கோரி மாணவ-மாணவிகள் போராட்டம்

0 2609
கல்லூரியின் தாளாளரை கைது செய்யக்கோரி மாணவ-மாணவிகள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில், தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அக்கல்லூரியின் தாளாளரை கைது செய்யக்கோரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்தனம்பட்டியில் செயல்பட்டு வரும் சுரபி நர்சிங் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு அக்கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன், பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், அவரையும், விடுதி வார்டன் அர்ச்சனா என்பவரையும் கைது செய்யக்கோரி மாணவ- மாணவிகள் திண்டுக்கல்-பழனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட போலீசார், மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார், விடுதி வார்டன் அர்ச்சனாவை கைது செய்ததோடு, தலைமறைவாக உள்ள கல்லூரி தாளாளரை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments