"புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ஏற்பாடு" - அமைச்சர் ராஜ கண்ணப்பன்

0 2649

புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறையில் பழைய பேருந்துகளை பயன்படுத்துவதால், பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், முதலமைச்சரின் ஆலோசனைப்படி, கடந்த 6 மாதங்களாக  போக்குவரத்து துறையை ஒழுங்குபடுத்தி, நல்லமுறையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சென்னையில் வெள்ள பாதிப்பில் பேருந்துகள் பாதிப்படையவில்லை, என தெரிவித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், பழைய பேருந்துகள் மிக விரைவில் சரி செய்யப்படும், என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments