மருத்துவ பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு

0 1650

மிழகத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க மருத்துவமனை முதல்வர்கள், இயக்குனர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையை சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதோடு, பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் முதல்வர்களும், இயக்குனர்களும் நேரடியாக சென்று,  மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களிடம் தனித்தனியே விசாரித்து, ஏதேனும் புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments