குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை, கடன் தொல்லையால் திருப்பூரில் நேர்ந்த சோகம்

0 2473

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே இரண்டு பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துத்துக்குளம் பகுதியை சேர்ந்த ஜெகன், மனைவி காயத்ரி, மகள்கள் தேஜஸ்வி, சுவஸ்வி உடன் அரவக்குறிச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடன் தொல்லையாலும் அதனால் கணவன் - மனைவி இடையே உருவான பிரச்சனையினாலும் மன விரக்தியடைந்த ஜெகன் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நேற்று சொந்த ஊரான துத்துக்குளத்திற்கு சென்றிருக்கிறார்.

இந்த நிலையில், தந்தை, மகள்கள் என மூவரும் அங்குள்ள விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கடன் தொல்லை, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் ஜெகன் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, ஜெகன் இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments