கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் மிக கனமழைக்கு வாய்ப்பு... 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்

0 4056

ட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என தெரிவித்த வானிலை ஆய்வு மையம், இன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

வட தமிழ்நாடு பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கும், ஈரோடு, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வட மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

மேலும் நாளை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வரும் 21ஆம் தேதி அரியலூர், பெரம்பலூர், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments