வெள்ளம் சூழ்ந்த தேவாலயத்திற்குள் சிக்கிய 8 பேர்: 4 மணிநேர போரட்டத்திற்கு பின் பாதுகாப்பாக மீட்பு

0 3929

விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி தேவாலயத்தை வெள்ளம் சூழ்ந்ததால் 8 பேர் கட்டிடத்தினுள் சிக்கிக் கொண்டனர்.

இரவு நேரத்தில் நீடித்த கனமழையினால் தேவாலயத்தின் உள்ளிருந்த பாதிரியார் உட்பட நால்வர் சிக்கிக் கொண்டதையடுத்து, அவர்களை மீட்க சென்ற நால்வரும் நீரின் வேகத்ததால் திரும்பமுடியாமல் தேவாலயத்திற்குள்ளேயே மாட்டிக்கொண்டனர்.

தகவலறிந்து அதிகாலை ஐந்து மணிக்கு, திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் மீட்பு பணியில் இறங்கினர்.

படகேதும் இல்லாததால் அவர்களது பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் கள்ளக்குறிச்சி-விழுப்புரம் மாவட்ட மீட்புப்படையினர் 4 மணிநேர போரட்டத்திற்கு பின் பைபர் படகுகள் மூலம் சிக்கியிருந்த 8 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments