பாலாற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீர் செல்வதால் வெள்ளப்பெருக்கு, இரு கரைகளையும் தொட்டபடி கடல் போல் காட்சி

0 2953

தொடர் கனமழை எதிரொலியால், காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் இருகரைகளையும் தொட்டபடி ஒரு லட்சம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இதனால், வாலாஜாபாத் பேருந்து நிலையம், அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலை முற்றிலுமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தரைப்பாலங்களும் நீரில் மூழ்கியுள்ளன. மாகரல் அடுத்த வெங்கச்சேரியில் தரைப்பாலத்திற்கு மேலே தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால், காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் மதுராந்தகம் வந்தவாசி செல்லக்கூடிய முக்கிய சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால், சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் 20 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டிலிருந்து வாலாஜாபாத் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம் செல்லக்கூடிய ரவுண்டானா சாலையில் 5 அடி அளவுக்கு நீர் தேங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments